TABCEDCO லோகோ
தொலைபேசி எண்கள்:
044-28190122
044-28190145
மின்னஞ்சல் முகவரி:
tabcedco@tn.gov.in
tabcedco@gmail.com
About Us Banner

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுள்ள சிறு தொழில்கள், வியாபாரம் ஆகியவற்றைச் செய்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் நிதியுதவி வழங்கி வருகிறது.

1982 ஆம் ஆண்டு இந்நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்நிறுவனம் இந்திய கம்பெனிகள் சட்டம் 1956-ன் கீழ் பதிவுபெற்ற ஒரு அரசுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.30 கோடி மற்றும் செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் ரூ.12.27 கோடி ஆகும்.

இந்நிறுவனம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் மாநில முகமையாக செயல்பட்டு வருகிறது. இக்கழகம் செயற்படுத்தும் பல்வேறு கடன் திட்டங்களுக்கான நிதியை, தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்திடமிருந்து தமிழ்நாடு அரசின் பொறுப்புறுதியின் மீது கடனாகப் பெறுகிறது.

13.01.2020 அன்று நடைபெற்ற தேசிய மாநாட்டின் போது, மாண்புமிகு சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சரால், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் 2018-19 ஆம் ஆண்டிற்கான அகில இந்திய அளவிலான சிறந்த செயல் திறனுக்கான செயல் திறன் விருது (வெண்கலம்) தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்திற்கு வழங்கப்பட்டது.

இக்கழகம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன், பல்வேறு கடன் திட்டங்கள் மூலம் தொடர்ந்து நிதியுதவி வழங்கி வருகிறது.