தகுதிகள்
- மாநில (அல்லது) மத்திய பட்டியலில் உள்ளபடி பயனாளி பிற்படுத்தப்பட்டோர் / மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினராக பட்டியலில் உள்ளபடி இருக்க வேண்டும்.
- குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.3,00,000/-க்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
- பயனடைவோரின் வயது வரம்பு 18 ஆண்டுகளுக்கு மேல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
கடன் விண்ணப்பப் படிவங்கள் பின்வரும் அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும்:
- சென்னையில் உள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை அலுவலகம்.
- மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் மண்டல மேலாளர்.
- கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.
- கூட்டுறவு கடன் சங்கங்கள் / வங்கிகள்.
அளிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து கீழ்க்காணும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலர் / மண்டல மேலாளர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் / கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும்.
- சாதி, வருமான மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்.
- முன்னணியில் உள்ள நிறுவனமொன்றிலிருந்து விலைப்புள்ளி.
- திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டும் ).
- குடும்ப அட்டை (Ration card).
- ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்களுக்கு கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்).
- நிதி உதவி பெறுவதற்கான ஆவணங்கள் / வங்கி கோரும் அடமானத்திற்குரிய ஆவணங்கள்.
- ஆதார் அட்டை.